நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழாவை எதிர்வரும் 27ஆம் திகதி, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில ஹட்டன்- டிக்கோயா நகர மண்டபத்தில் ஸ்தாபக தலைவர் பிரபல பாடகர் ராஜ்போரா தலைமையில் நடைபெறவுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஒன்றியம், பல சவால்களுக்கு முகம் கொடுத்து மூன்று வருடத்தை பூர்த்தி செய்கின்றது என ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மத அனுஷ்டானங்கள்,அண்மையில் மறைந்த பிராந்திய ஊடகவியலாளர் விஜயரட்னம் மற்றும் பிரபல கீபோட் வாத்திய கலைஞர் , பாடகர் கண்ணா ஆகியோருக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடன் அவர்கள் பற்றிய விவரணம் இடம்பெறவுள்ளது.

இதன்போது கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரித்தார்.

அத்துடன் அன்றைய தினம் புதிய கலைஞர்கள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அனைத்து கலைஞர்களையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.