நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விஷேட செயலமர்வு

0
558

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்க ளுக்கான விசேட செயலமர்வொன்று நுவரெலியா எல்பின் ஹோட்டலில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாடுகளும் ஊடகத்துறையில் பங்களிப்பு மற்றும் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அதனோடு இணைந்து செயற்படும் திணைக்களங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

மேற்படி செயலமர்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரதான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் (கொழும்பு) நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here