நாவலப்பிட்டி கெட்டபுலா பிரிவிலிருந்து அக்கரவத்தை தோட்டத்திற்கு ஆற்றை கடந்து செல்ல பாலம் ஒன்றை அமைக்க கடந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டும் அங்கு ஏன் பாலம் நிர்மானிக்ககப்பவில்லை.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பாலத்தை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்,மாவட்ட செயலாளருடனான கலந்துரையடலின்போது இவ்வாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் உத்தியோக பூர்வ காரியாலயததில் இடம்பெற்றது இதன்போது சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான்,மருதபாண்டி ராமேஸ்வரன்,இ.தொ.கா தேசிய அமைப்பாளர் எ.பி.சக்திவேல் ,பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர் விதுரசம்பத்,இடர் முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ரஞ்சித் அலககோன் உட்பட கெட்டபுலா அக்கரவத்தை தோட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் பிரதநிதிகள் கெட்டபுலா கீழ் பிரிவிலிருந்து அகரவத்தை தோட்டத்திற்கு பிரதான ஆறு ஒன்றை கடந்தே மக்கள் நீண்டகாலமாக பயணித்து வருவதாக சுட்டிக்காட்டினர்.
இருப்பினும் நீண்ட நாட்களுக்கு முன் இவ் ஆற்றை கடந்து செல்ல பாதுகாப்பான பாலம் ஒன்றை நிர்மாணித்து தருமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாலம் ஒன்றை அமைப்பதற்காக அங்கு கடந்த காலங்களில் அடிக்கல் நாட்ப்பட்டுள்ளன நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
இப்பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காலங்களில் கடும் மழை பெய்யும் போது இவ் ஆற்றில் அதிகமாக வெள்ளம் பாயும் ஆனால் அகரவத்தை மக்கள் இவ் ஆற்றை கடந்து தமது தோட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் உயிரை கையில் பிடித்து கொண்டே அங்கு இடப்பட்டுள்ள கயிர் ஒன்றின் உதவியுடன் ஆற்றை கடக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நிலவியுள்ள சீரற்ற காலநிலையில் கடந்த முதலாம் திகதி மாலை பெய்த கடும் மழையில் தொழிலுக்கு சென்று ஆற்றை கடந்து தோட்டத்திற்கு சென்ற மூவர் ஆற்றில் திடீரென பெருக்கெடுத்த வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் அகரவத்தை மக்களின் கோரிக்கை ஏற்க்கப்பட்டு அங்கு பாலம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதற்கான நிர்மான பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இந்த உயிர்கள் பறிபோயிறுக்காது என மாவட்ட செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இது தொடர்பாக கவனத்திற் கொண்டு துரிதமாக அகரவத்தை மக்கள் பயணிக்க பாலத்தை அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளி மக்கள் குடியிறுப்புகளுக்கு அருகிலும்,அதனை ஊடுறுவி செல்லும் பிரதான மின் கம்பிகளுக்கு இடையூராக காணப்படும் பாரிய மரங்களை அவ்வப்பகுதி கிராம சேவை அதிகாரிகள் ஊடாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் உருதியளித்தார்.
மேலும் பிரதேச சபை பிரதேசங்களில் வடிகால் அமைப்புகள் மற்றும் சிறு பாலங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி அபிவிருத்திகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளர் உறுதியளித்தார்.
அத்துடன் சீரற்ற காலநிலை காலங்களில் நுவரெலியா மாவட்ட தோட்டப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாரிய அனர்த்தங்களை ஏற்படாத வகையில் அனர்த்த இடங்களை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வெலிஓயா, ஆக்ரோயா ஆகிய தோட்டத்தை ஊடுறுத்தும் செல்லும் ஆற்றை அகலப்படுத்தவும் மற்றும் புதுகாடு தோட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் பாரிய கற்பாறை ஒன்றையும் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Cwc media unit