நுவரெலியா – மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண் சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

இந்த மண்சரிவு காரணமாக நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவளைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது

நீண்ட நேர சிரமத்தின் பின் நுவாரெலியா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருகின்றன

இவ்வீதி ஓரங்களில்  பல இடங்களில் மண்சரி ஏற்பட வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

செ.திவாகரன்