நுவரெலியா-வலப்பனையில் ஆண்கள் இருவர் சடலமாக மீட்பு

0
300

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசார்ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழியில் இருந்து  குதுருஒயா பகுதியை சேர்ந்த 61 வயதுடைய அபேசிங்க பண்டாரா மற்றும் 30வயதான ருவான் குமார ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு பேரும் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை எனவும் இவர்கள் தொடர்பில் இவர்களின் உறவினர்கள் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததை அடுத்து இவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போதே இந்த இருவர் குழியில் ஒன்றில் சடலமாக இனங்காண பட்டதோடு பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இந்த இரண்டு பேரினதும் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை குழிக்கு அருகாமையில் மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here