நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல போதுமான எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலைக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்புப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவுப் பகுதிகளில் “போதிய எரிபொருள் இன்றி அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க வேண்டாம்” என்ற டிஜிட்டல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.