தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள் ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நேற்று முன் தினம் இரவு 8 மணி வரை 6800இற்கும் அதிகமான நுழை வுச்சீட்டுக்கள் விற்பனையா கின என்று அதன் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாமரை கோபுரத்தை பார்வையிட 500 ரூபாய் நுழைவுச்சீட்டுக்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இதேசமயம், தாமரைக் கோபுரத்தை வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணிவரையும் பார்வையிட முடியும் என்றும் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.