நோர்ட்டன் – அட்டன் வீதியில் காசல்ரீ கொலனிக்கு அருகில் இடம்பெற்ற இ.போ.ச பஸ் விபத்தில் குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இன்று காலை 7.15 கொத்தலனைவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனினும் குறித்த பகுதியில் சிறிய வாகனங்கள் மாத்திரமே செல்லக்கூடியதாக உள்ளது.

தற்போது குறித்த வீதியின் ஒஸ்போனலிருந்து அட்டன் செல்லும் பஸ்கள் காசல்ரீ சந்தியில் இருந்தே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியதாக உள்ளது.

அத்துடன் , அட்டன்கொத்தலனலக்ஸபான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்போனிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரையில் இன்று காலை முதல் மாணவர்கள், தொழிலுக்குச் செல்வோர் என பலரும் போக்குவரத்து இன்மையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.