‘நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளிலான மாபெரும் இலவச மருத்துவ முகாம் 21-08-2022ல் ஹப்புகஸ்தன்னை – வேவெல்கெட்டிய கிராமிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இவ் இலவச மருத்துவ முகாம் இடம்பெறும். விசேட வைத்திய நிபுணர்கள் பலரும், தாதிகளும், வைத்திய ஊழியர்களும் இம் முகாமில் பங்கேற்று நோய் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அனைவரும் இதன் பயன்களைப் பெற்றுக்கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிடைத்திருக்கும் இவ் அறிய சந்தர்ப்பத்தைஇ எமது மக்கள் பூரணமாக பயன்படுத்திக் கொள்ளும்படிஇ இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில், அதன் பொருளாளர் ஆர். அஜித்குமார் கேட்டுள்ளார்.
இம் மாபெரும் இலவச மருத்துவ முகாமைஇ இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா