நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மீது இ.தொ.க நடவடிக்கை

0
522

நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.காவின் உறுப்பினரும் பிரதேச சபை உறுப்பினருமான சூசை எலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, வெகுவிரைவில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

நோர்வூட் பிரதேச சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிபொருள் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை எட்டி உதைத்து பந்தாடிவிட்டு, காத்திருந்த நபர் ஒருவரையும் எச்சரித்துள்ளார். அத்துடன் தனது இடுப்பில் மறைத்து வைத்தியிருந்த போத்தலை எடுத்து குத்துவதற்கு முயற்சித்ததுடன் தூசன வார்த்தைகளால் வசைபாடினார். பந்தாடிவிட்டு அச்சுறுத்தும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையிலேயே அவர் மீது இ.தொ.க நடவடிக்கை எடுக்கவுள்ளது.

‘நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, எதிர்வரும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here