நோர்வூட் – பொகவந்தலாவை வரையிலான வீதியினை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் -வீடியோ இணைப்பு

0
585

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை வரையிலான பிரதான வீதியில் போக்குவ ரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றமை குறித்து பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ பிரதேச சாரதிகலாள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியினை விதீ அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கபட்டபோதிலும் விதீயின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும் இந்ந வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்கள் , பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எமது வீதியினை புனரமைத்து தராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் வாக்கு கேட்டு வரவேண்டாமென ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டி காட்டியதோடு டியன்சின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி பொகவந்தலாவ நகர் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவை சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here