பதவி விலக மறுப்பு ?

0
452

தனக்கும் தமது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் கிட்டாத வரையில் ராஜினாமாவை தள்ளி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே தான் குறிப்பிட்டபடி பதவி விலகப் போவதில்லை என அறிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரை விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை தோன்றியிருந்தது.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து இருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. இந்நிலையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்திருப்பதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here