பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 20 laugfs கேஸ் அட்டனில் மீட்பு

0
430

அட்டனில் உள்ள கடையொன்றில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லாப் எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகாரசபைப் பிரிவினருக்குக்கிடைத்த ரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலிலேயே இவ்வாறு எரிவாயு கொள்கலன்கள் எரிவாயு நிரப்பப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்ட கொள்கலன்களை கொழும்பில் கறுப்புச்சந்தையில் விற்பதற்கு தயார்படுத்திய வேளையிலேயே சம்பவ இடத்திற்கு குறித்த அதிகாரிகள் விரைந்து கொள்கலன்களுடன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் அட்டன்நீதிமன்னறத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here