பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு; மூன்று பிள்ளைகளின் தாய் பலி – படங்கள் வீடியோ இணைப்பு

0
434

இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் ஏறட்பட்ட மண்சரிவில் சிக்கி பெண்னொருவர் இன்று காலை உயிரிழந்த சம்பவமொன்று இன்று திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை பெயத் கடும் மழையினால் மண்மேடு சரிந்து வீட்டின் ஒரு பகுதியில் விழுந்துள்ளது. இதன்போது சமையலறையில் காலை நேர அலுவல்களை தனது மகளுடன் செய்துக்கொண்டிருந்த குடும்பப் பெண்ணான தாயின் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா என்ற மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள் ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம். கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here