குளத்துக்கு நீராடச் சென்ற பத்து பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை புள்ளியடித்துறைப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பில் தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மாணவர்கள் 10 பேர் குளத்தில் நீராடிய வேளையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து குறித்த மாணவரை வாழைச்சேனை வைத்தியசாலையில் கொண்டுச்செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மீராவோடை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கும் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.