பயிலுநர் ஆசிரியர்களுக்கு விஷேட சலுகை

0
313

தேசிய கல்வியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு அதிகபட்சம் மேலும் 10,000 நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறையொன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 வருடங்கள் கல்விசார் பயிற்சியும் ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியும் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

ஒரு வருடகால உள்ளகப் பயிற்சிக்காக கல்வியியல் கல்லூரிகளில் தங்குமிடம் வழங்கப்படாததுடன், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஆசிரிய பயிலுநர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது ஆசிரிய பயிலுநர் ஒருவருக்கு கல்விசார் பயிற்சியின் போது வழங்கப்படும் 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லாமையினாலே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here