பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப் பகிர்வு

0
313

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நூல்களின் வாசிப்பு அனுபவப் பகிர்வு  நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகர் வழியாக இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நிகழ்வில, திருமதி விஜி ராமச்சந்திரன், காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் ‘மைவண்ணன் இராமகாவியம்’ எனும் நு{ல் பற்றியும், திருமதி தாமரைச்செல்வி , கே.ஆர்.டேவிட் எழுதிய கே.ஆர்.டேவிட் சிறுகதைகள் எனும் நூல் பற்றியும் எழுத்தாளர் கருணாகரன், சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சாரம் ஊர்ந்தோர்’ எனும் நூல் பற்றியும் எம்.வாமதேவனின் ‘குன்றிலிருந்து கோட்டைக்கு’ எனும் நூல’ பற்றி எழுத்தாளர் மல்லியப்பு சந்தி திலகர் உரை நிகழ்த்துவார்.

மூத்த புலம்பெயர் எழுத்தாளர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதியின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் Meeting ID- 88435805663 . Passcode – 353292 எனும் இணைய முகவரியின் ஊடாக கலந்துகொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here