நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறும், சமூக மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான இளங்கலை பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் பரீட்சைக்கு சிறைவாசம் அனுபவித்து வரும் கலைஞர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இன்று தோற்றியதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிவரும் 11 மற்றும் 18 ஆம் திகதிகளில் அவருக்கு பரீட்சை இடம்பெறும். பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதியை அடுத்து வெலிக்கடை சிறைச்சாலை கல்வி நிலையத்தில் உள்ள பரீட்சை மண்டபத்திலேயே அவர் பரீட்சை எழுதுவதாகவும் தெரிவித்தார்.