பரீட்சை எழுதச் சென்ற மாணவிக்கு மேற்பார்வையாளரால் பாலியல் துன்புறுத்தல்

0
376

அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதச் சென்ற மாணவியொருவர் பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துளளதாகத் தெரிய வருகிறது.

குறித் மாணவி கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி, ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நிகழ்ந்தவற்றைக் கூறிய பின்னர் தனது பெற்றோருடன் சென்று கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here