டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 வீதம் அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும் எனவும், 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இது 4 வீதத்தை விட குறைவானது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  விலை குறைந்துள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

கட்டணத்தில் மாற்றம் தேவையென்றால், ஆட்டோகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜயருக் கூறினார்.