பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

0
231

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 122 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின. 3 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றியிருந்தார். துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here