பாகிஸ்தானில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் கடந்த ஜூன் முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களால் 343 பேர் சிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 3 கோடி பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடர் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

சிந்து மாகாணத்தில் இதுவரை 306 பேர் உயிரழந்துள்ளனர். பலோசிஸ்தானில் 234 பேரும் கைபர் பக்துன் கவா மாகாணத்தில் 185 பேரும் பஞ்சாபபில் 165 பேரும் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் 37 பேர் உயிரிழந்தள்ளனர்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 166.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு சராசரி மழை வீழ்ச்சி 48 மில்லிமீற்றர் ஆகும். இம்மாதம் மழைவீழ்ச்சி 241 சதவீதம் அதிகரித்துள்ளது.