நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை சூம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச  மற்றும் அரச சார்ப்பான தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள அசாதாரண சூழ்நிலையினாலேயெ இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.