சிறுவர்களுக்கான பாடசாலைப் புத்தகத்தில் ஆபாச ஓவியங்கள் அச்சிடப்பட்டுள்ளமை சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப் புத்தகத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியங்களும் அமெரிக்க நாட்டின் கொடியை உடையாக அணிந்தவாறு இருக்கும் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை புத்தகங்களை ஆய்வு செய்யுமாறு நாட்டின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.