பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கோடீஸ்வரரான பூசகரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் பலரை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

44 வயதான உனவடுன பிரதேசத்தை சேர்ந்த, காலியில் உள்ள ஆலயம் ஒன்றின் கோடீஸ்வரரான பூசகர் ஒருவரையே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.