பாணுக்குள் இருந்து சிக்கிய கண்ணாடித் துண்டுகள்

0
224

பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்ட சம்பவமொன்று நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ். மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் பாண் வாங்கிய ஒருவர் அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த கடைக் சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றே பாண் விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பொதுச் சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here