பாண் விலை 190 ரூபா?

0
157

நிர்ணயிக்கப்பட்ட நிறையை விட குறைவான நிறையுடைய ஒரு இறாத்தல் பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து அந்த விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, வெட் வரி, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, அதற்கேற்ப எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையையும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here