பாராளுமன்றத்தை பொது மக்களும் பார்வையிடலாம் – இன்று முதல் அனுமதி

0
214

பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று பரவல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்தை பார்வையிட இது வரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவால் கடந்த 14 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய முதல் கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதர முடியும்.

இதற்கமைய, காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றுக்கு பிரவேசிப்பதற்கான விண்ணப்பங்களை www. parliament.lk  என்ற இணையத்தளம் மூலம் பெறலாம். அத்துடன், 011 2777 473, 011 2777 335 என்ற தொலைநகல் இலக்கங்கள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here