பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாப்பழம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0
199

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாப்பழம், ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியனவற்றை நாடாளுமன்ற உணவு விடுதியில் வழங்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர, பலாப்பழங்களை அறுவடை செய்வதற்காக காட்டுப் பகுதிகளுக்குள் பொதுமக்களை நுழைய அனுமதிக்கும் யோசனையை அமைச்சரவையில் முன்வைத்தார்.

அவரின் யோசனையை பாராட்டிய அரச தலைவர், உணவுக்காக பலாப்பழம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகளை வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு பாராளுமன்ற உணவு விடுதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காட்டுப் பகுதியில் பலாப்பழங்கள் பயனற்று போவதனை விட மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது நன்மை பயக்கும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here