ஒரு மாதத்திற்குள் தான் வகித்த அமைச்சுப்பதிவியிலிருந்த விலகியுள்ள பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு தேசியபட்டியல் ஊடாக தம்மிக்க நியமிக்கப்பட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவினால் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான நெருக்கடியை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்து விலகினார். ஜனாதிபதி ரணில் பிரதமராக இருக்கும் போது அவர், பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் அவர் தற்போது ஜனாதிபதியானதும் தம்மிக்க விலகத் தீர்மானித்துள்ளார்.