பாலத்தை கடக்க முற்பட்ட  வயோதிபப்பெண் தடுக்கி விழுந்து மரணம்

0
97
நீண்ட காலமாக புணரமைக்கப்படாது உடைந்த நிலையில் இருந்த பாலத்தில் தடுக்கி விழுந்த வயோதிபப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
புப்புரஸ்ஸ  பொலிஸ் பிரிவிற்குபட்ட   ஜீ.கே.  பிரிவு  தோட்டத்தில் உள்ள பாலம் சில வருடங்களுக்கு முன் மழை காரணமாக இரண்டாக உடைந்து போன நிலையில் இருந்தது.
ஜீ.கே.பிரிவைச்சேர்ந்த வசித்து வந்த  78 வாயதுடைய   மலையாண்டி  காளியம்மா என்ற வயோதிபப்பெண் (  25)இன்று  காலை குறித்த சிறிய  பாலத்தை கடந்து வியாபார நிலையத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி து  பாலத்தை கடந்து வந்த போது  பாலத்தில் இருந்து வழுக்கி  ஒடையில் விழுந்த நிலையில் மரணமாகியுள்ளனர்,
குறித்த பகுதியிலுள்ளவர்கள் மரத்தூண்களை கொண்டு அமைக்கப்பட்ட  சிறிய மரப்பாலம் ஒன்றினூடாகவே இதுவரை காலமும்  பயணித்து  வருகின்றனர்.
இந்த பாலத்தை செய்து புணரமைத்து தருமாறு  பல அரசியல் மற்றும் அரச அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைத்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here