பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கு ஒப்பந்தம்

0
91
 இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத் திணைக்களம் கைச்சாத்திட்டுள்ளது.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதில் கலந்துகொண்டார்.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 80,000 இலங்கையர்கள் இந்த திட்டத்தின் மூலம் இறுதியில் உதவிகளைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உட்பட எதிர்பாராத தாமதங்களுக்குப் பின்னர் , அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களம் இந்த கூட்டு ஒப்பந்தத்தை நேற்று (13)  இறுதி செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here