பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன.

போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக ஆரம்ப நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில் போட்டியை ஏற்று நடத்தும் நாடு பங்குபெறும்.

ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி 60,000 ஆசனங்கள் கொண்ட அல் பைத் அரங்கில் நடைபெறும். திகதி மாற்றத்தால் உலகக் கிண்ணப் போட்டி 29 நாட்கள் நீடித்து டிசம்பர் 18ஆம் திகதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.