பிரதமர் அலுவலகத்திலுள்ள முக்கிய உபகரணங்கள் திருட்டு

0
374

அரசுக்கு எதிராக கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரி மாளிகைக்குள் பிரவேசித்ததன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாக பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையின் ஊடகப் பிரிவில் இருந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

ஊடகப் பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணினிகள், வீடியோ கெமரா மற்றும் ஏனைய கெமரா உபகரணங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அலரி மாளிகையில் வசிக்கவில்லை எனவும், பிரதமரின் ஊடகப் பிரிவின் ஒரு பகுதியை மாத்திரம் அங்குள்ள கட்டிட வளாகத்திற்கு மாற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here