பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த தினேஸ்

0
253

இலங்கையின் 32வது பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தன அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முதல் தடைவையாக இன்று (27) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

புதிய சபை முதல்வர் அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, யாதானிமி குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திசாநாயக, சபை முதல்வரின் செயலாளரும், பிரதமரின் மேலதிக செயலாளருமான ஹர்ஷ விஜேவர்தன, ஆளும் கட்சி முதற்கோலாசானின் செயலாளரும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் பிரதமரை வரவேற்றனர்.

இதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி மற்றும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நுழைவாயிலின் ஊடாக பாராளுமன்றத்தில் அமையப்பெற்றுள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு வருகை தந்தார்.
இங்கு வாசுதேவ நாணயகார, பந்துல குணவர்தன, நிமல் லன்சா, சிசிர ஜயகொடி, (வைத்தியகலாநிதி) கயஷான் நவனந்த உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வருகை தந்திருந்தனர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக மற்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here