பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டு, சர்வ கட்சி அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள தான் தயார் என சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார் என அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் பதவியேற்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தப்பின்னர் தான் பதவி விலகத் தயார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.