பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான சமகி வனிதா பலவேகய, கொழும்பு 07, தர்ஸ்டன் கல்லூரிக்கு எதிரே உள்ள வீதியில் ஒன்று கூடியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மற்றுமொரு போராட்டம் காரணமாக கொழும்பில் உள்ள இலங்கை வங்கி மாவத்தையின் போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடியினால் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்களால் அவ்வப்போது பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.