பிரபல எழுத்தாளர் மறைந்தார்

0
272

தமிழ்நாடு, பொன்னேரிப்பட்டி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் குப்பண்ணன், சின்னப்பபாரதி இன்று மாலை (13 – 06 – 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்! மே 2ஆம் திகதி, 1935 ஆம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும் போது 87 வயது.

இந்திய மொழிகள் பலவற்றிலும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றிலும் அவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை பலவற்றைப் படைத்தளித்துள்ளார். இலக்கிய அறக்கட்டளை மூலம் பல லட்சம் ரூபாய் பரிசாக வழங்கி வந்தவர்.. முற்போக்குச் சிந்தனையாளர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) பணிகளில் பல வருடங்கள் ஈடுபட்டுழைத்தவர். ‘செம்மலர்’ இலக்கிய சஞ்சிகையின் ஆரம்ப ஆசிரியர். ஈழத்தவர் பலரின் படைப்புகள் இந்திய மொழிகளில் வெளிவர உதவியவர்.

– வி. ரி. இளங்கோவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here