பிரான்ஸில் சாதனை நிகழ்த்திய இலங்கை மாணவி

0
279

கணித பாடத்தில் தேசியமட்டத்திலான பரீட்சையில் பிரான்ஸில் முதலாம் இடத்தை பெற்று சித்தியடைந்து இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி சாதனை படைத்துள்ளார்.

மேகா சந்திரகுமார் என்ற மாணவியே இவ்வாறு சாதனை நிகழ்த்தியுள்ளார். அம் மாணவியை கௌரவிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அவர்களினால் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது எவ்வாறான உதவியை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி கேட்ட போது, ‘உங்களது உதவி எனக்குக்கிடைத்தால் எனது குடும்பம் தான் சந்தோஷமடையும் ஆனால் தற்போது எனது நாட்டுமக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here