பிறப்புச் சான்றிதழ் குறித்து முக்கிய அறிவிப்பு

0
304

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் பிறப்புச் சான்றிதழ்களை தற்போது டிஜிட்டல் வடிவில் வழங்கி வருகி றது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகள் டிஜிற்றல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வருட இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது டன், பதிவாளர் நாயகத்தின் கருத்தின் பிரகாரம், ஆங்கிலம், தமிழ் அல்லது சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழி மாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here