ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று  தெரிவித்துள்ளார்.

மணிலாவில்   இன்று காலை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மலாக்கனாங் அரண்மனைக்கு வந்தடைந்தபோது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.