பாடசாலை மலசலக்கூடத்துக்குள் மாணவிகள் மூவர் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மாணவிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர், அந்த மூவரின் பெற்றோர்களையும் அழைத்து, கடுமையாக எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த மாணவிகள் மூவரில், ஒரு மாணவியின் தந்தை வீட்டுக்கு சிகரெட்டுகளை வாங்கிவந்துள்ளார். அதிலிருந்து இரண்டொன்றை எடுத்து வந்த மாணவியே இவ்வாறு புகைப்பிடித்துள்ளார்.

புகைப்பிடித்த மாணவிகளின் பெற்றோர், பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச பணியாளர்கள் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.