புதிய அமைச்சரவை நாளை 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நியமிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவையை நியமிப்பது நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் கொழும்பு – 07, உள்ள பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.