பொலிஸ் சட்டப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியில் பொலிஸ் மா அதிபரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர இதற்கு முன்னர் நீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.