பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு நாட்டின் ஜனாதிபதியாக பவியேற்பார் எனத் தெரிவிக்கப்படஉள்ள நிலையில், நாளை புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் ரணில் விக்கிரமசிங்க  கோரிக்கையொன்றை விடுத்திருந்தார். பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை பொது இணக்கப்பாட்டுடன் பெயரிடுமாறு அவர் கேட்டிருந்தார்.

இது தொடர்பில் பல்வேறு கட்சிகள் குழுக்களுடன் தாம் பேச்சுக்களை நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

இதன் அடிப்படையில் ஏற்படும் இணக்கப்பாட்டுடன் புதிய பிரதமரின் பெயரை நாளை காலை 10.00 மணிக்கு சபாநாயகருக்குத் தெரிவிக்கவிருப்பதாகவும் ஹர்சா தெரிவித்துள்ளார்.