உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால்  பயன்படுத்தப்பட்டு வரும்   வட்ஸ்அப் குறித்த புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஒரு வட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்கும் வசதியையும், 2GB வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

Android கைபேசியிலிருந்து ஐபோனுக்கு மாறும் பயனர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு, வட்ஸ்அப் Message History ஐ, Android சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வட்ஸ்அப் குறித்து நீண்ட நாட்களாக பயனர்கள் கேட்ட இந்த வந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.