கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில், மனைவியும் (25-வயது) அவரது சகோதரரும் (32-வயது) கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று புத்தளம், முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த மனைவியின் கணவன், காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.