பெண்களின் நலன் குறித்து விஷேட அவதானம் செலுத்துவோம் என்கிறார் கீதா எம்.பி

0
143

பெண்களின் சுகாதார துவாய்களுக்காக விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் மொத்த சனத் தொகையில் 52 சத வீதமானவர்கள் பெண்களாவர். இந்நிலையில் அனைத்து பெண்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக சுகாதார துவாய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சுகாதார துவாய்கள் மீதான துறைமுகம், விமான சேவை அபிவிருத்தி வரிகள் , சுங்கக் கட்டணம் உள்ளிட்ட வரிகளை குறைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனுடன் தொடர்புடைய தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி விலைகள் குறைந்த பின்னர் பழைய விலையிலேயே அவை சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டும். அத்துடன் மாணவிளுக்கு 150 ரூபாவுக்கு சுகாதார துவாய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here