பெருந்தோட்ட மக்களின் நாட்சம்பளத்தை 3250 ரூபாவாக அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கடிதமொன்றையும் இன்றைய தினம் தொழில் அமைச்சின் செயலாளர் தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் சம்பள நிர்ணயசபை செயலாளருக்கு கையளித்துள்ளார்.
சம்பள நிர்ணயசபையின் ஊடாகவே அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்ற நிபந்தனையையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.