”பெற்றோருக்கு எரிபொருட்களை வழங்கினால் உன்னை காதலிப்பேன்”

0
455

தனது வீட்டுக்கு எரிவாயுவையும், எரிபொருளையும் வாங்கி வந்து பெற்றோரிடம் வழங்கினால் உன்னை காதலிக்கிறேன் என்று இளம் பெண்ணொருவர் கூறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாத்தறை பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரிடம் காதலிக்குமாறு இளைஞர் ஒருவர் கேட்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தின் போது , அவளின் நண்பிகளும் உடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு பதில் கூறிய காதலிப் பெண் ,வீட்டுக்கு வந்து என்னை பெண் கேளுங்கள். முடிந்தால்… அப்பாவுக்கு பெற்றோல் போத்தலும் அம்மாவுக்கு எரிவாயு கொள்கலனும் வாங்கி கொண்டு வாருங்கள். அப்போது உங்களை நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கின்றாள்.

இதன் பின்னர், அந்த இளைஞனும் சில நாட்களாக அருகில் உள்ள பல நகரங்களில் எரிவாயு கொள்லன்களை கொள்வனவு செய்வதற்காக தேடி அலைந்து திரிவதாக அவரின் நண்பர்கள் தெரிவித்ததாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here